வேன் – கெப் வாகனம் மோதி விபத்து.. மூன்று பேருக்கு நேர்ந்த நிலைமை..!

0
210

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை – கல்தொட்ட வீதியில் கிரிமெடிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.

மலர்ச்சாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணித்துக்கொண்டிருந்தபோது வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.