மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; இரு பெண்கள் கைது.!

0
88
Common photo

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.