சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து.!

0
279

புத்தளம் -குருணாகல் பிரதான வீதியில் வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (30) அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.