பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – தீபாவளி முற்பணம் அதிகரிப்பு.!

0
72

அரச பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக 10,000 ரூபாய் தீபாவளி முற்பணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இம்முறை தீபாவளி முன்பணமாக 20,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஆகியவற்றின் கீழுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் வழங்கப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் குறைந்த கொள்வனவு திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விசேட முற்பணத் தொகை வழங்கப்படுவதாக அந்த அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.