தூதரகத்தை படம் எடுத்தவர் கைது.!

0
135

இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூதரகத்தை புகைப்படம் எடுத்ததற்காக யாகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைக் கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது அவரிடம் இருந்து பல ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.