மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு..!

0
211

அத்தனகல்ல – அலவல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த சிறுவன் எப்போதும் மின்சார விளையாட்டு பொருட்களில் விளையாடுவதை விரும்பக்கூடியவர் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய போது, சிறுவனின் தாயும் தந்தையும் வீட்டில் வேறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் சிறுவன் கிடப்பதைக் கண்டு வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனவே பெற்றோர்களே பிள்ளைகள் மீது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. அவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் கவனிப்பது நல்லது.