இலங்கையில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கை.!

0
213

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளை (119) அழைத்து தெரியப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://lk.usembassy.gov/security-alert-avoid-travel-to-arugam-bay-due-to-credible-threat/