அவிசாவளை பஸ் விபத்தில் 28 பேர் காயம்.. இருவர் கவலைக்கிடம்.!

0
147

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக பதிவாகியுள்ளது.

அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இரண்டு பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதேநேரம், ஏழு பேர் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Photos – Accident 1st