கண்டியில் இரண்டு சடலங்கள் மீட்ப்பு.. விசாரணையில் போலிஸார்.!

0
49

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கராஜ மாவத்தையில் உள்ள உணவு விடுதி ஒன்றிற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேராதனை வீதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.