முதலையிடம் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

0
128

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவை கடக்க சென்ற நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் (04) மாலை நண்பர்கள் இருவருடன் மொர ஓயாவை கடந்து ரஞ்சித் மங்கட பகுதியில் மது அருந்தியுள்ளார்.

இதன்போது, வீட்டுக்குச் சென்று இறைச்சி கொண்டு வருவதற்காக மீண்டும் ஆற்றைக் கடந்தபோது, ​​அவரை முதலை பிடித்துச் சென்றது.

சடலத்தின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

உயிரிழந்தவர் கெமுனுபுர – பதவி ஶ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபராவார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.