நாட்டில் இன்று (03) அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு.!

0
121

இன்று உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மதுபானக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.