அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

0
182

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி மெல்போர்ன் யெல்லிங்போ பகுதியில் மாலை 4.40 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனால் காரை கட்டுப்படுத்த முடியாமையால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

பேர்விக் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஸ்டீபன் என்ரூ என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.