அரச பேரூந்து விபத்து – 8 பேர் வைத்தியசாலையில்.!

0
77

அவிசாவளை- கேகாலை பிரதான வீதியின் கொட்டபொல தண்டவாளத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதுடன், இந்த இடத்தில் வீதி வளைந்துள்ளதால் சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 8 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.