கிளிநொச்சியில் லஞ்சம் வாங்கிய இரு போலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்.!

0
128

கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் சேவையை இடைநிறுத்த கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் 5,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதே இதற்குக் காரணம்.

மோட்டார் சைக்கிளின் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்ததால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கவே இலஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையையும் இடைநிறுத்தியுள்ளார்.