மட்டக்களப்பில் நடந்த வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு..!

0
395

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செங்கலடிப் பகுதியில் இருந்து சந்திவெளி நோக்கி சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரம் ஒன்றில் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதுடன் உழவு இயந்திரச் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.