மனைவியை சு.ட்.டு.க்.கொ.ன்.ற கணவன் – பதுளையில் சம்பவம்.!

0
169

பதுளை ஹிதகொட பிரதேசத்தில் நேற்று (31) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சட்டப்பூர்வ கணவராலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர், யுவதி ஒருவருடன் தொடர்புப்பட்டுள்ளமை சட்டரீதியான மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, குறித்த யுவதியின் வீட்டிற்கு இருவரும் சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான கணவர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.