தகராறு முற்றியதில் மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்.. இலங்கையில் சம்பவம்.!

0
178

ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் கணவன் மனைவியை பொல்லு ஒன்றால் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை பதிவாகியுள்ளது. எப்பாவல, பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.