வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
99

வவுனியா – போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக போகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (26) காலை போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.