பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் கற்கும் வடமேல் (வயம்ப) பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் கண்டி ரியகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவர் மூன்று நாட்களாக தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மடிக்கணினியில் குறிப்பையும் வைத்துள்ளதாக தெரிவருகின்றது.
கம்பஹா ஹப்புகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த மாணவன் மேலும் மூன்று மாணவர்களுடன் குறித்த விடுதியில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
3 மாணவர்களும் வடமேல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதும் அவர்கள் ஆறு மாத பயிற்சி நெறிக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவனின் மரண விசாரணை நேற்று (21) மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்னவினால் நடத்தப்பட்டது.
வாழ்க்கை என்ற வினோதமான திரைப்படத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், சமூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் விட்டுச்சென்ற குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பேராதனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சல்கமுவ சாட்சியங்களை முன்னெடுத்துள்ளார். மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி இது தற்கொலை என தீர்மானித்துள்ளார்.










