நிவித்திகல காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட தேல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் பெண்ணொருவரை கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவராவார்.
குடும்பப்பிரச்சினை காரணமாக இவ்வாறு சந்தேக நபர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்ததுடன் தனது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் முன்னதாகவே தாய் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீட்டினை சோதனையிட்ட போது சந்தேக நபர் வீட்டினுள் தூக்கிட்டு தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.










