முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொடூரமான முறையில் ப.டு.கொ.லை

0
126

பத்தரமுல்லை – அக்குரேகொட, அருப்பிட்டிய, 10வது லேன் பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (18) காலை முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் குறித்த நபர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி எனவும் அவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.