விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்.. 61 பேர் உயிரிழப்பு – பதற வைக்கும் வீடியோ.!

0
209

பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஏ.டி.ஆர் 72-500 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாவ்லோ நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் 57 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.