இரு மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் 5 பேர் காயம்.!

0
123

நுரைச்சோலை மாம்புரியவில் முச்சக்கரவண்டியும் இரு மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் காயமடைந்த ஐவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுரைச்சோலை மாம்புரிய பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியும் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் முச்சக்கரவண்டியும் கல்பிட்டியிலிருந்து பாலாவிய நோக்கிச் சென்றதாகவும், சில காரணங்களால் முச்சக்கரவண்டி திரும்ப முற்பட்டதாகவும்,

அதிவேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் ஒரே நேரத்தில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.