மட்டக்களப்பில் கயஸ் வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
210

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரானை சேர்ந்ந ஆறு பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் மன்மதராசா (வயது 63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் கிரான் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது

இதன்போது அவ்வீதியால் நடந்து சென்ற நபர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீதியால் நடந்து சென்ற போது படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.