வவுனியாவிலிருந்து சென்ற சொகுசு பஸ் மோதியதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே மரணம்.!

0
339

அநுராதபுரம், நொச்சியாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (30) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து பயணித்த சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.