யாழி்ல் பரிதாபமாக உயிரிழந்த மூன்றரை மாத குழந்தை.!

0
123

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மூன்றரை மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தை பால் குடித்த சில மணிநேரங்களில் அசைவின்றி காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்தக் குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு (Jaffna Teaching Hospital) பெற்றோர் கொண்டுசென்றபோது குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குழந்தையின் இறப்புக்கு நிமோனியாவே காரணம் என மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.