பரிதாபமாக உயிரிழந்த பட்டதாரி மாணவி – சோகத்தில் நண்பர்கள்.!

0
273

கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே இந்த மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் தந்தை மகள் குறித்து தெரிவிக்கையில்…

“எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.