கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாப மரணம்.!

0
175

ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தெவ்மி அமயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.