பராமரிப்பு நிலையத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம்.!

0
83

மத்தேகொடை சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய மூன்று சிறுமிகளும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 18 வயதுடைய சிறுமியொருவருமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மத்தேகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.