மோட்டார் சைக்கிளில் யாழிலிருந்து முல்லைத்தீவு வந்தவர் விபத்தில் உயிரிழப்பு.!

0
195

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதா விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முன்னாள் நகர பிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற நிலையில் வீதியில் அமைக்கப்பட்ட சிறு மேட்டில் (பம்மிங்) விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.