அஸ்வெசும 2ம் கட்ட கணக்கெடுப்பு – ஜூலை 15 முதல் ஆரம்பம்.. வெளியான அறிவிப்பு.!

2
237

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நலன்கள் சபையுடன் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத மக்களுக்கு அடுத்த வாரத்திற்குள் அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.