கிளிநொச்சியில் காதல் விவகாரம் – இளைஞனின் கைது துண்டிப்பு.!

0
113

கை துண்டாடப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன் (23) இரவு இடம்பெற்றுள்ளது.

காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே துண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.