காரைதீவில் அடுத்தடுத்து சோகம்.. மேலுமொரு வைத்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
187

காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.இலங்கநாதன் அவர்களின் மூத்த புதல்வன் டாக்டர் தக்சிதன் (BH Kalmunai), உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறி வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருக்கின்றது.

அன்னாரின் பூதவுடல் பாணம வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காரைதீவிலிருந்து இம்முறை மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வெளிவந்த G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவை சேந்த மாணவன் எஸ்.அக்சயன் நேற்று முன் தினம் (14) நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.