யாழில் வைத்தியசாலை விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட இளம் வைத்தியர்..!

0
249

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக்குள் தூ,க்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும், கொழும்பு – வெள்ளவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையடுத்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது வைத்தியர் சடலமாக காணப்பட்டார்.

இச் சம்பவம் கொலையா? அல்லது அவரே தன் உயிரை மாய்த்துக் கொண்டாரா? என தெரியவராத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்துள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.