‘சரிகமப’ இந்திரஜித்திற்கு உதவி கரம் நீட்டிய பெண்.. குவியும் வாழ்த்துக்கள்.!

0
227

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல வழக்கறிஞர் சுமதி இலங்கை இந்திரஜித்திற்கு உதவி கரம் நீட்டியுள்ளார்.

அதாவது இந்த வார நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சுமதி பாடகர் கார்த்திக் உதவியுடன் நான்கு போட்டியார்களுக்கு பண உதவி செய்துள்ளார்.

அதில் இலங்கை இந்திரஜித்தும் ஒருவர். அவர் இந்தியாவில் தங்கியிருந்து இசை போட்டி முடியும் வரை அதற்கான பண உதவி, சாப்பாடு மற்றும் தங்குமிட வசதிகளை அவர் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் என்பவர் இந்திரஜித்துக்கு தேவையான ஆடை அணிகலன்களுக்கான பொறுப்பை ஏற்று கொண்டிருக்கின்றார். இந்நிலையில் இந்திரஜித் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.