பாடசாலை மாணவியை 2 நாட்களாக காணவில்லை.. கண்டால் உடன் தகவல் தாருங்கள்..!

0
200

கண்டி – கெல்லாபோக்க – மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பன்வில பொலிஸ் நிலையத்தில் நேற்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஹரிவதனி என்ற உயர்தர மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் (+94 78 171 3389) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.