யாழில் கனடா அனுப்புவதாக கூறி 31 இலட்சம் மோசடி செய்தவர் கைது.!

0
230

கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்று தருவதாக இளைஞன் ஒருவரிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் இருந்து 31 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தினை பெற்றுக்கொண்டு நீண்ட நாட்கள் ஆகியும், கனடா அனுப்பவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.