வெள்ளத்தில் மூழ்கி ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்.. இலங்கையில் நடந்த சோகம்

0
333

கடும் மழையுடனான வானிலையால் மாத்தறையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி உற்ற நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

20 வயதுடைய தரிந்து சம்பத் மற்றும் 17 வயதுடைய நவிந்து ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டாம் திகதி, தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய அங்கு வசிப்பவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் போது ​​மாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் சிறுவயதில் இருந்தே உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரது உடல்களும் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.